சிறிய முதலீட்டுடன் துவங்கி அதிக லாபம் தரும் பேக்கரி தொழில்
இக்கால உணவு முறையில் பேக்கரி தொழில் ஒரு பெரும் பங்கு உள்ளது. பேக்கரி தொழில் என்பது அனைவராலும் விரும்பப்படும் உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதற்கான ஒரு உன்னதமான தொழில் ஆகும்.
பேக்கரி தொழில் உணவு பொருள்கள் வேகமாக தயாரிக்கப்படுவதால், திடீர் விருந்துகள் மற்றும் சிறிய விழாக்களுக்கு ஏற்றவையாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பேக்கரி உணவுகளை விரும்பாதவர்கள் இல்லை.
பேக்கரி தொழில் உணவு பொருள்கள் புயல் மழை போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பெரும் பங்கு வக்கிறது.
தினமும் 1000 முதல் லாபம் தரும் குறைந்த முதலீட்டு தொழில் Click Here
கேக்குகள், பிஸ்கெட்டுகள், பன்கள், பப்ஸ்கள் போன்ற பல்வேறு இனிப்புகள் மற்றும் காரங்கள் அனைவராலும் விரும்பப்படும் உணவுகள் ஆகும். கோதுமை மாவு, கம்பு, சோளம் போன்ற ஆரோக்கிய உணவுகளை பயன்படுத்தி சர்க்கரை இல்லாத (Sugar-Free) பிஸ்கெட்டுகள், கைகுழந்தைகளுக்கான ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்கள் தயாரிக்கலாம்.
தனிப்பட்ட கேக் வடிவமைப்பு (Customized Cakes)
பிறந்தநாள், திருமணம் மற்றும் நிறுவன விழாக்களுக்கு தனிப்பட்ட கேக் வடிவமைப்புகளை உருவாக்கலாம். வாடிக்கையாளர்களின் புகைப்படங்களை கேக்கில் பிரிண்ட் செய்து விற்பனை செய்யலாம். சிறப்பு பண்டிகை, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கான ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்கள் மற்றும் கேக்குகளை தயாரித்து விற்பனை செய்யலாம்.
தொழில் தொடங்க முக்கிய அம்சங்கள்
- தரமான பொருட்கள்.
- சுத்தமான தயாரிப்பு முறை.
- வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்து கொள்ளுதல்.
- சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம்.
பேக்கரி தொழிலில் வருமானம்
தொடக்கத்தில் ஒரு சிறிய பேக்கரி மாதத்திற்கு ₹20,000 முதல் ₹50,000 வரையில் லாபத்தை ஈட்டலாம். அதே நேரத்தில் ஒரு நடுத்தர பேக்கரி, விற்பனை அதிகரிக்கும்போது, ₹1,00,000 முதல் ₹2,00,000 வரை வருமானம் பெற வாய்ப்புள்ளது.
எளிமையான வருமான கணக்கு
ஒரு யூனிட் கேக் விலை ₹500 எனில் ஒரு நாள்ல சராசரியாக 5 யூனிட் விற்பனை ஆகும் பட்சம் ₹2500 வருமானம் வரும் இதுவே மாத கணக்கீட்டின் படி ₹75000 வருமானம் கிடைக்கும்.
இதை போல் மற்ற பேக்கரி உணவு பொருள்களின் இருந்தும் வருமானம் ஈட்டலாம். இது ஒரு ஆரம்ப நிலை கணக்கு மட்டுமே, விற்பனை அளவுக்கு ஏற்ப லாபம் மாறும்.
பேக்கரி நடத்துவதில் முதலீடு
- மெஷின் மற்றும் பொருட்கள்: ₹50,000 - ₹5,00,000.
- மாதாந்திர மொத்த செலவு (மாவு, சர்க்கரை, வாடகை, மின்சாரம்): ₹30,000 - ₹70,000.
நல்ல இடத்தில் ஒரு சிறிய பேக்கரி மாதத்திற்கு ₹1.5 லட்சம் முதல் ₹3 லட்சம் வரையிலான வருமானத்தை ஈட்ட முடியும். வெற்றியை உறுதிப்படுத்த உங்கள் தயாரிப்பின் தரம், விலையின்மை மற்றும் வாடிக்கையாளர் சேவை முக்கியம்.
பேக்கரி தொழில் சிறிய முதலீட்டுடன் துவங்கி, ஆரோக்கியமான மற்றும் தனிப்பட்ட தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் நல்ல லாபத்துடன் சிறந்த வளர்ச்சியை பெறலாம்.


.jpg)

.jpg)
